×

காளான் போண்டா

தேவையான பொருட்கள் :

2 பாக்கெட் காளான்
1/4 கப் மைதா மாவு
1/4 கப் சோள மாவு
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 வெங்காயம்
தேவையான அளவு உப்பு
2 சிட்டிகை ஃபுட் கலர்
பொரிப்பதற்கு எண்ணெய்.

செய்முறை:

காளான் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதோடு மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக சூடானதும் கலந்து வைத்துள்ள கலவையில் இருந்து சிறிய உருண்டைகளாக பிடித்து சேர்க்கவும். மொறுமொறுப்பாக பொரித்து எடுத்தால் சுவையான காளான் போண்டா தயார்.

The post காளான் போண்டா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்